அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு... - இயான் மோர்கன் அறிவிப்பு... - சோகத்தில் ரசிகர்கள்..!

England Cricket Team Viral Photos England
By Nandhini Feb 13, 2023 11:15 AM GMT
Report

இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மென் இயான் மோர்கன் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இயான் மோர்கன் ஓய்வு அறிவிப்பு

இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மென்னாக வலம் வருபவர் இயான் மோர்கன். இவர் தலைமையிலான இங்கிலாந்து அணி 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று மாபெரும சாதனை படைத்தது.

இதுவரை நட்சத்திர வீரர் இயன் மோர்கன் 16 டெஸ்ட்களில் விளையாடி 700 ரன்களை எடுத்துள்ளார். மேலும், 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை அவர் 7701 ரன்களை எடுத்துள்ளார்.

இயன் மோர்கன் 115 டி20 போட்டிகளில் விளையாடி 2458 ரன்களும், 83 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2458 ரன்களும் எடுத்திருக்கிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

ஆனாலும், ஊள்ளூர் போட்டிகள், பிற லீக் கிரிக்கெட்டுகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் அவர் ஓய்வு பெறுவதாக இயன் மோர்கன் இன்று அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.   

captain-eoin-morgan-announces-retirement