‘ நம்ம தோனியா இது...நம்பவே முடியல’ - புதிய கெட்டப்பில் இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
ஐபிஎல் தொடருக்கான விளம்பரத்தில் தோன்றும் தோனியின் புதிய கெட்டப் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்கும் நிலையில் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு தலா 5 அணிகள் இடம் பெற்றுள்ளன.
வழக்கமாக ஐபிஎல் போட்டிகள் வந்தாலே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். ஒவ்வொரு அணியும் தனித்தனி ப்ரோமோஷன்கள், ஒட்டுமொத்த ஐபிஎல் விளம்பரம், வீரர்களின் புதிய கெட்டப்கள் என அந்த 2 மாதங்களும் அமர்க்களப்படும்.
அந்த வகையில் சென்னை அணியின் கேப்டன் தோனியின் கெட்டப் ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும். அதன்படி நடப்பாண்டு அவரின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதில் அவர் அதிக தலைமுடியுடன், காக்கிச்சட்டை பேண்ட் அணிந்துக்கொண்டு பஸ் ஓட்டுநர் போன்று காட்சி தருகிறார். அதுவும் சென்னையில் இருக்கும் ஓட்டுநர் போன்று விளம்பரத்தில் தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay Tuned#DhonisNewLook #ComingSoon pic.twitter.com/S17D8L7JPD
— Star Sports (@StarSportsIndia) February 26, 2022