கலர்ஃபுல் லுக்கில் தல தோனி - தோனியா இது என ரசிகர்கள் உற்சாகம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் புதிய ஸ்டைலிஷ்க் லுக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவர், எம்.எஸ்.தோனி சமீபத்தில் தனது குடும்பத்துடன் சிம்ளா சென்றிருந்தார்.
அப்போது அவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்-உடன் தோனி கால்பந்தாட்ட பயிற்சியில் ஈடுப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படமும் வைரலானது.
இந்த நிலையில் தோனி தனது ஹேர் ஸ்டைலை மாற்றி ஸ்டைலிஷ் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிகுதித்து வருகின்றனர்.