தோனி வீட்டுக்கு வந்த புது வரவு - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

msdhoni vintagelandrovercar
By Petchi Avudaiappan Jan 20, 2022 04:02 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி வாங்கியுள்ள வின்டேஜ் கார் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

கிரிக்கெட் உலகின் கூல் கேப்டன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தல தோனி பைக் மற்றும் கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். அவர் வீட்டில் மட்டும் க்ளாசிக் மற்றும் மாடர்ன் கார்/பைக்குகள் 100க்கும் மேல் இருப்பது பலரும் அறியாத தகவல். 

எங்கே ஏலம் நடந்தாலும் அங்கு தோனி எண்ட்ரி கொடுத்து விடுவார். அந்த வகையில் சமீபத்தில்  `பிக் பாய் டாய்ஸ்’ எனும் நிறுவனம் நடத்திய ஆன்லைன் ஏலத்தில், லேண்ட்ரோவர் 3 சீரிஸ் லேண்ட்ரோவர் காரை பெரும் தொகைக்கு ஏலம் எடுத்திருக்கிறார். இந்த ஏலத் தொகை எவ்வளவு என்ற விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. 

தோனி வீட்டுக்கு வந்த புது வரவு - என்ன ஸ்பெஷல் தெரியுமா? | Captain Dhoni Buys A New Vintage Land Rover Car

மஞ்சள் நிறத்தில் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட ஸ்டேஷன் வேகன் கார் 1970 முதல் 1980-களின் முற்பகுதி வரை லேண்ட்ரோவர் நிறுவனத்தால் பிரிட்டனில் தயாரிக்கப்பட்டது. 2.25 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 4-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே தோனியின் கராஜில் ஆடி Q7, மெர்சிடீஸ் பென்ஸ் GLE, ஜீப் கிராண்ட் செரோக்கி, ஃபெராரி 599 GTO, ஹம்மர் H2, நிஸான் ஜாங், மிட்சுபிஷி பஜேரோ SFX - கவாஸாகி நின்ஜா H2, ஹார்லி டேவிட்ஸன் ஃபேட்பாய், BSA கோல்டு ஸ்டார்,confederate Hellcat X 32 போன்ற அதிநவீன கார்/பைக்குகளும் - யமஹா RD350, பிஎஸ்ஏ, ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட க்ளாசிக் மோட்டார் பைக்குகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.