என்ன பந்து போடுற நீ... இளம் வீரரிடம் கோபப்பட்ட தோனி - அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் கேப்டன் தோனி நடந்துக் கொண்ட விதம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் நடந்த போட்டியில் சென்னை - ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. தொடர்ந்து பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இதனிடையே இப்போட்டியின் மூலம் மீண்டும் சென்னை அணி கேப்டனாக தோனி பொறுப்பேற்றார். அவர் வழிநடத்திய முதல் போட்டியே வெற்றி என்ற போதிலும் களத்தில் அவர் நடந்துக் கொண்ட விதம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Dhoni 2.0 - Captain Cool? to Captain Hot?! IPL 2022 (01.05.2022)
— Virtual Nanban (@VirtualNanban) May 1, 2022
Click here to find out:https://t.co/PsOS53Uh6D#CSKvsSRH #IPL2022 #Match46 #chennaisuperkings #CSK #SRH
#MSDhoni #whistlePodu #Yellove #ravindrajadeja #Captain #yelloveagain #whistlepoduarmy #Cricket pic.twitter.com/chcgYImTun
குறிப்பாக ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 38 ரன்கள் தேவை என இருந்த போது முதல் 2 பந்துகளில் நிக்கோலஸ் பூரண் 10 ரன்களை அடித்துவிட்டார். இந்த சூழலில் 4வது பந்தை முகேஷ் சௌத்ரி வைடாக போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முகேஷ் சௌத்ரி லெக் சைட் வைட் லைனில் போட ஃபீல்டர்கள் அனைவரும் ஆஃப் சைட் திசையில் இருந்தனர்.
இது தோனிக்கு கடும் ஆத்திரத்தை கிளப்பியது என்பது அவரது முகபாவனைகள் மூலமே நன்கு தெரிந்தது. களத்திலேயே முகேஷை தோனி கடுமையாக திட்ட அவரின் முகமே மாறியது. ஆனால் கடைசி ஓவருக்காக தோனி என்னிடம் எதுவுமே ஸ்பெஷலாக கூறவில்லை. ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் லைனில் மட்டும் வீசுமாறும் வேறு எதுவும் வித்தியாசமாக செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியதாக முகேஷ் சவுத்ரி கூறியுள்ளார்.