Captain Amarinder Singh History in Tamil: ராஜ வம்சத்தில் பிறந்த இந்திய ராணுவ வீரர் - அரசியல்வாதி ஆன கதை!
இந்திய ராணுவ வீரராக இருந்து பின்னர் அரசியலுக்குள் வந்த கேப்டன் அமரீந்தர் சிங்கின் வாழ்கை பற்றி பார்க்கலாம்.
பிறப்பு, கல்வி
இந்திய அரசியல்வாதி கேப்டன் அமரீந்தர் சிங், 1942-ல் மார்ச் 11-ம் தேதி பிறந்தார். இவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலாவில் பிறந்தார்.
இவர் புல்கியன் வம்சத்தைச் சேர்ந்த பாட்டியாலாவின் மகாராஜா யாதவீந்திர சிங் மற்றும் மகாராணி மொஹிந்தர் கவுர் ஆகியோரின் மகன் ஆவார். இவர் சிம்லா தாரா ஹாலில் உள்ள லொரேட்டோ கான்வென்ட் பள்ளியில் படித்தார்.
பின்னர் லாரன்ஸ் பள்ளியில் சானாவரில் பயின்றார், பின்னர் டெஹ்ராடூனில் உள்ள தி டூன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.
குடும்பம்
இவர் 1964-ல் பிரனீத் கவுரை மணந்தார், இவர்களுக்கு ரனிந்தர் சிங் என்ற ஒரு மகனும், ஜெய் இந்தர் கவுர் என்ற மகளும் உள்ளனர்.
இவரின் மனைவி பிரனீத் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியதோடு, 2009 முதல் அக்டோபர் 2012 வரை வெளியுறவு அமைச்சகத்தில் இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.
இவரின் சகோதரி ஹேமிந்தர் கவுர், முன்னாள் வெளியுறவு அமைச்சர் கே.நட்வர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.
அமரீந்தரின் மனைவி பிரனீத், அகாலிதளத்தின் தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சிம்ரஞ்சித் சிங் மானின் மனைவி சிரோமணியின் சகோதரி ஆவார்.
ராணுவ வாழ்க்கை
இவர் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய இராணுவ அகாடமியில் படித்து பட்டம் பெற்றார். பிறகு ஜூன் 1963-ல் இந்திய இராணுவத்தில் சேர்ந்தார்.
இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலத்தில், அவர் சீக்கியப் படைப்பிரிவில் நியமிக்கப்பட்டார், மேலும் 1964 முதல் மேற்குக் கட்டளைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்கின் பொது அதிகாரியின் உதவியாளராகவும் பணியாற்றினார்.
அனால், இவர் 1965-ன் தொடக்கத்தில் இராணுவத்தை விட்டு வெளியேறினார். ஆனால் இந்திய-பாகிஸ்தான் போர் வெடித்தபோது, அவர் மீண்டும் சேவையில் இணைந்து 1965-ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் போராடினார்.
1966 இவர் ஆயுதப் படையை நிரந்தரமாக விட்டுவிட்டார். இராணுவப் பின்னணியில் இருந்து வந்த அமரீந்தர், "இராணுவமே எப்போதும் என் முதல் காதலாக இருக்கும்" என்று மேற்கோள் காட்டினார்.
அரசியல்
இவர் பள்ளி பருவத்தில் இருந்தே ராகுல் காந்தியின் நண்பர் என்பதால் இவர் 1980-ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பிறகு 1984-ல் புளூ ஸ்டார் ஆப்ரேஷனின் போது ராணுவத்திற்கு எதிரான நடவடிக்கைகள் எடுத்ததால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
அவர் சிரோமணி அகாலிதளத்தில் சேர்ந்தார் மற்றும் தல்வாண்டி சபோவில் இருந்து மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர், 1992-ம் ஆண்டில், இவர் அகாலி தளத்திலிருந்து பிரிந்து, பின்னர் சிரோமணி அகாலி தளம் (பாந்திக்) என்ற பிரிவினைக் குழுவை உருவாக்கினார்.
பின்னர் 1998-ம் ஆண்டு சோனியா காந்தி காங்கிரஸ் பொறுப்பேற்ற பிறகு காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்பட்டது. இவர் பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக 3 முறை (1999 முதல் 2002, 2010 முதல் 2013, மற்றும் 2015 முதல் 2017 வரை) பணியாற்றியுள்ளார்.
கேப்டன் அமரீந்தர் சிங் பஞ்சாப் விதான் சபாவில் 5 முறை பாட்டியாலா (நகர்ப்புறம்) மூன்று முறையும், தல்வண்டி சபோ மற்றும் சமனா தலா ஒரு முறையும் உறுப்பினராக இருந்துள்ளார்.
முதல்வர்
இவர் 2002-ல் பஞ்சாப் முதல்வராக பதவியேற்றார், அவர் 2007 வரை பதவியில் தொடர்ந்தார். பின்னர் செப்டம்பர் 2008 இல், அகாலி தளம்-பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சியின் போது, அம்ரிஸ்டர் மேம்பாட்டு அறக்கட்டளைக்கு தொடர்புடைய நிலம் பரிமாற்றத்தில் முறைகேடுகள் காரணமாக வெளியேற்றப்பட்டார்.
இருப்பினும், 2010-ல், இந்திய உச்ச நீதிமன்றம் இவரின் வெளியேற்றம் அதிகப்படியானது என்ற அடிப்படையில் இது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று அறிவித்தது.
காங்கிரஸ் கட்சி 2017-ல் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் இவரது தலைமையில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார்.
மாநிலத்தின் முதலமைச்சராக அவர் இரண்டாவது பதவியில் இருந்தபோது, இவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் அணுக முடியாதவர் என்று காங்கிரஸின் நவ்ஜோத் சிங் சித்து தலைமையிலான ஒரு பிரிவினரால் விமர்சிக்கப்பட்டார்.
பின்னர், 2021-ல் காங்கிரஸின் பஞ்சாப் எம்.எல்.ஏ.க்கள் தனது தலைமையின் மீது நம்பிக்கையில்லாமல் இருப்பதாகத் தொடர்ந்து உரையாடல்களால் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
பஞ்சாப் லோக் காங்கிரஸ், பாஜக
இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு 2021-ல் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற இந்திய பிராந்திய அரசியல் கட்சியை உருவாக்கினார்.
2022-ல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளிலும் அக்கட்சி போட்டியிடும் என அறிவித்தார். ஆனால், மாநிலங்களவைத் தேர்தலில் அக்கட்சி எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.
பிறகு 2022-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) இணைய முடிவு செய்தார். சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து அவர் இந்த முடிவை எடுத்தார் என்று கூறப்படுகிறது.