வீரதீர செயலுக்காக , வீர் சக்ரா பெறும் கேப்டன் அபி நந்தன்!

pakistan captainabhinandan awardedvirchakra
By Irumporai Nov 22, 2021 05:55 AM GMT
Report

புல்வாமாவில்  தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தானின் F16 ரக விமானத்தை அவர்களின் எல்லைக்குள் சென்று தாக்கினார் அபிநந்தன். இதில் கேப்டன் அபிநந்தன் சென்ற போர் விமானம் தாக்குதலுக்கு உள்ளானது. பாராசூட் மூலம் உயிர் தப்பிய அபிநந்தனர் பாக் எல்லையில் விழுந்தார்.

பாக் பிடியில் சிக்கிய அபிநந்தனை பின்னர் இந்தியாவின் பேச்சுவார்த்தை மூலம் பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது. இதன் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் அபி நந்தன். அபிநந்தனின் மீசை இந்தியா முழுவதும் வைரலானது.

பாகிஸ்தான் சம்பவத்துக்கு பிறகு  அபிநந்தனுக்கு குரூப் கேப்டன் பதவி வழங்கப்பட்டது.  இந்நிலையில் வீர தீர செயல்களுக்கு வழங்கப்படும் வீர் சக்ரா விருது கேப்டன் அபிநந்தனுக்கு இன்று வழங்கப்படவுள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த இந்த விருதை வழங்கவுள்ளார். டெல்லியில் எளிமையான முறையில் இன்று நடைபெறவுள்ள விழாவில் இந்த விருதை பெறுகிறார் அபிநந்தன்.