“என் பொறுமைய ரொம்ப சோதிக்கிறீங்கடா” - தென் ஆப்ரிக்கா வீரரின் ஸ்டெம்பை சும்மா தெறிக்கவிட்ட உமேஷ் யாதவ்

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில்,

இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று துவங்கிய (11-1-22) இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி 79 ரன்களும், புஜாரா 43 ரன்களும் எடுத்து கொடுத்தாலும்,

மற்ற வீரர்கள் பெரிதாக ரன் குவிக்க தவறியதால், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தென் ஆப்ரிக்கா அணி சார்பில் அதிகபட்சமாக ரபாடா 4 விக்கெட்டுகளையும், ஜென்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் துவக்க வீரரும் கேப்டனுமான டீன் எல்கர் வெறும் 3 ரன்னில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

மற்றொரு துவக்க வீரரான மார்கரமும்ன்(8 ரன்கள்) பும்ராஹ்வின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி விக்கெட்டை இழந்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேசவ் மஹராஜ் 25 ரன்கள் எடுத்த போது உமேஷ் யாதவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய ராசி வாண்டர் டூசன் 21 ரன்கள் எடுத்த போது உமேஷ் யாதவின் பந்தில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

இதன் மூலம் போட்டியின் 49 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள தென் ஆப்ரிக்கா அணி 136 ரன்கள் எடுத்துள்ளது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்