அவரத் தவிர யாராலையும் திறமையா வழிநடத்த முடியாது : டோனிக்கு புகழாரம் சூட்டிய பிசிசிஐ

T20WorldCup msdhoni TeamIndia
By Irumporai Sep 09, 2021 12:10 PM GMT
Report

ஐபிஎல் திருவிழா முடிந்த இரண்டு நாட்களில் உலகக்கோப்பை டி20 திருவிழா தொடங்குகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு அந்த நாட்களை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் வகையில் உலகக்கோப்பையில் கலந்துகொள்ளும் இந்திய அணி வீரர்களின் விவரத்தை பிசிசிஐ அறிவித்தது. அணி தேர்வில் நடராஜன் இல்லை என்ற குறையினை தவிர மற்றப்படி  அனைத்தும்  ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே அமைந்துள்ளது.

இந்த நிலையில் இரண்டு தரமான சம்பவங்கள் நடந்துள்ளது, ஒன்று நான்காண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அஸ்வின் வருகை மற்றொன்று ரொம்பவே எல்லாரும் விரும்பிய தருணம் . ஆம் இந்திய அணியின் ஆலோசகராக தல தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ரசிகர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும். 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தான் தோனியைக் கடைசியாக இந்திய ஜெர்சியில் பார்த்தது. அதற்குப் பிறகு இப்போது தான் இந்திய அணியுடன் இணையவிருக்கிறார். டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டது ஏன் என பிசிசிஐ தரப்பிடம் ஒரு தனியார் ஊடகம் கேட்டிருக்கிறது.

அதற்குப் பதிலளித்த  பிசிசிஐ இந்திய அணியை வழிநடத்தி செல்ல தோனி மட்டும் தான் மிகச் சிறந்தவர். அவரை விட யாராலும் அதை திறமையாகச் செய்துவிட முடியாது. அணியில் அவர் இருப்பதே வீரர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். அதை எங்கள் செயலாளர் ஜெய் ஷாவும் விரும்பினார். அதன் படி தோனிக்கு போன் செய்து அவரது விருபத்தையும் தெரிந்து கொண்ட பிறகே இந்த அறிவிப்பை வெளியிட்டோம் எனக் கூறியுள்ளது.

தாங்கள் எந்த அணிக்கு கேப்டன் ஆனாலும் எங்களுடைய கேப்டன் தோனி தான் கோலியும் ரோஹித்தும் அடிக்கடி கூறுவார்கள். அது உண்மை என செயலிலும் செய்துகாட்டிவிட்டார் கோலி