மின் வாரியப் புகார் : மன்னிப்பா அதெல்லாம் கேட்க முடியாது, முடிந்தால் கேஸ் போடுங்க - அண்ணாமலை ஆவேசம்

electricity annamalai
By Irumporai Oct 22, 2021 07:05 AM GMT
Report

மின்சார விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது; நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என அண்ணாமலை தெரிவித்தார். மின்வாரியத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதுகுறித்த ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

இதையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி அண்ணாமலை தன்னிடம் உள்ள ஆதாரங்களை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டும் இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.

இதையடுத்து, அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதாரங்களை வெளியிட்டார். அதற்கு செந்தில் பாலாஜி அண்ணாமலையிடம் ஆதாரத்தை கேட்டால் வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கொடுக்கின்றீர்கள், சரியான ஆதரங்களை வெளியிடுங்கள் என  அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.

இந்த நிலையில் ட்விட்டர் தளத்தில் அண்ணாமலை சரியான ஆதாரங்களை வெளியிடாதது ஏன்..? சமூக வலைதளங்களில் போகிறபோக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வேலையில்லாதவர்கள் சுமத்தக் கூடாது என திமுகவினர் ட்விட்டரில் குரல் எழுப்பினர்.

இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, மின்சார விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது; நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என தெரிவித்தார்.