அதெல்லாம் முடியாது..ஓபிஎஸ் உடன் இணைய முடியாது - இபிஎஸ் திட்டவட்டம்
ஓ.பன்னீர்செல்வத்துடன் மீண்டும் இணைய முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
எடப்பாடி குற்றச்சாட்டு
ஒற்றை தலைமை குறித்து 15 நாட்கள் பன்னீர்செல்வத்திடம் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சட்ட விதிகளை பின்பற்றி செயல்பட்டு உள்ளதால் நீதிமன்றத்தை நாடி உள்ளோம் நிச்சயம் நல்லது நடக்கும் எப்போதும் நான் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டது இல்லை.

கட்சியில் படிப்படியாக உயர்ந்தவன் நான் கட்சிக்கு சோதனை வந்த போதெல்லாம் நாங்கள் தான் முன்நின்றோம் பன்னீர்செல்வம் நிற்கவில்லை.
தொண்டர்களிடம் செல்வாக்கு இருக்கிறது என்றால் பொதுக்குழுவில் ஓபிஎஸ் நிரூபிக்க வேண்டியதுதானே?
ஆட்சிக்கு வந்த ஓராண்டு மற்றும் நான்கு மாதங்களில் திமுக அரசு எதுவும் செய்யவில்லை தமிழகத்தில் இப்போது மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது.
திட்டங்கள் ஏதுமில்லை
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது, தமிழகத்தில் போதை பொருள் விற்றக்கப்படுகிறது.