ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 - கஞ்சா, குட்கா விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும் - டிஜிபி அதிரடி
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது.
பழிக்குப்பழி கொலை, கஞ்சா விற்பதில் மோதல் என பல்வேறு காரணங்களுக்கு தொடர் கொலை சம்பவங்களும் மோதல் சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டு வருகிறது.
இதனை தொடர்ந்து காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவின் பெயரில் தமிழகம் முழுவதும் ரெளடிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
2021 டிசம்பர் 2022 ஜனவரி வரை நடத்தப்பட்ட கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்று முதல் ஏப்ரல் 27 வரை மீண்டும் கஞ்சா வேட்டை நடத்த டிஜிபி உத்தரவிட்டிருக்கிறார்.
இது குறித்து டிஜிபி கூறுகையில், தொடர்ந்து கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாய்யும். மேலும், போதைப் பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும் என்றார்.
You May Like This