இன்று வேட்பு மனு தாக்கல் முடிந்தது- முழு விபரங்கள்

election dmk bjp aiadmk
By Jon Mar 12, 2021 05:10 PM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளுக்கும், காலியாக உள்ள கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கும், புதுச்சேரி மாநில சட்டசபை தொகுதிகளுக்கும், ஏப்., 6ல் வாக்குபதிவு நடத்தப்படுகிறது.

இந்நிலையில் அனைத்து தொகுதிகளுக்கும் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது, காலை 11:00 மணியில் இருந்து மாலை 3:00 மணி வரை தேர்தலில் போட்டியிட விரும்புவோர், அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை நாட்கள்; அன்று மனு தாக்கல் கிடையாது.

மீண்டும், 15ம் தேதியில் இருந்து, 19ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். அன்று மாலை, 3:00 மணியுடன், மனு தாக்கல் நிறைவடையும். வரும், 20ம் தேதி, வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கும். வேட்பு மனுவை வாபஸ் பெற, 22ம் தேதி கடைசி நாள். அன்று, வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் 51 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர், 50 ஆண் வேட்பாளர்கள், ஒரு பெண் வேட்பாளர் என மொத்தம் 51 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.