திமுக வேட்பாளர்கள் நேர்காணல் ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கியது

election dmk interview
By Jon Mar 02, 2021 06:31 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை மும்முரமாக நடத்தி வருகின்றன. தேர்தல் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் அரசியல் கட்சிகள் விருப்பமனுக்களை பெற்றுள்ளன.

இந்நிலையில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்ப மனு அளித்துள்ள வேட்பாளர்களிடம் திமுக சார்பில் இன்று நேர்காணல் நடைபெறுகிறது. திமுக தங்கள் கூட்டணி கட்சியான மதிமுக, விசிக உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3, மனித நேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்படுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் விசிக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை முதல் திமுக வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற உள்ளது. இன்று காலை நெல்லை, ராமநாதபுரம் ,தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்ட வேட்பாளர்களிடம் நேர்காணல் நடைபெறுகிறது.

பிற்பகலில் திண்டுக்கல், தேனி ,விருதுநகர் ,சிவகங்கை மாவட்ட வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 6ஆம் தேதி வரை வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெறுகிறது.