சில்லரையுடன் வந்து அலறவிட்ட வேட்பாளர்: அப்படி என்ன நடந்தது?
election
candidate
Villivakkam
By Jon
வில்லிவாக்கம் தொகுதி சுயேச்சை வேட்பாளர், சில்லரை காசுகளுடன் மனு தாக்கல் செய்ததால், அலுவலர்கள் சிரமப்பட்டனர். வில்லிவாக்கம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான, பத்திரிகையாளர் கந்தசாமி, 18 கிலோ எடையுள்ள, 5 ரூபாய் நாணயங்களுடன் வந்து, அயனாவரம் தேர்தல் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதனால், அலுவலர்கள் சிரமப்பட்டு, நாணயங்களை சரிபார்த்தனர். தேர்தல் ஆணையம், எளிதாக பணம் செலுத்த, இணையதள வசதி செய்துள்ளது.
ஆனால் மக்களை கவரும் எண்ணத்தில், வேட்பாளர்கள் சிலர், சில்லரை நாணயங்களை எடுத்து வந்து, நேரத்தை வீணடிப்பதால், தேர்தல் அலுவலர்கள் அவதிப்படுகின்றனர்.