வேட்பாளர் பட்டியல் நாளை இறுதியாக வெளியீடு!
வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.இதனால் தமிழகத்தில் அரசியல் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. தேர்தல் களத்தில் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்திருக்கிறார்கள்.
வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் தாக்கல் செய்யப்பட்ட 7,238 மனுக்களில் 1,855 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

2000க்கும் மேற்பட்ட மனுக்கள் பரிசீலனையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. மேலும் 3,003 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நாளை வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
நாளை வேட்புமனுக்களை திரும்ப பெற நாளை கடைசி நாளாகும். எனவே மாலை மூன்று மணிக்கு மேல் இறுதி பட்டியல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.