கனடா மக்களுக்கு தடை விதித்த சீனா
கனடாவிலிருந்து வரும் பயணிகள் சீனாவிற்குள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இதுவரை 89,564 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 4,636 பேர் இறந்துள்ளனர். அந்நாட்டில் மீண்டும் கொரோன வைரஸின் பாதிப்பு தலைவிரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், கனடாவிலிருந்து வரும் வெளிநாட்டவர்களுக்கு சீனாவில் நுழைய தற்காலிக தடையை அறிவித்து, பெய்ஜிங் தூதரகம் இன்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.
அதில், சீன வாழிட உரிமை வைத்திருப்பவர்கள், வெளிநாட்டினர், வேலை காரணமாக அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக கனடாவிலிருந்து வரும் இவருக்கு சீனாவிற்குள் நுழைய தற்காலிகமாக அனுமதிக்கப்படாது என குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய கோவிட்-19 நிலைமை மற்றும் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டின் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சீனா கூறியுள்ளது.
இந்த தடை டிப்ளமேடிக் மற்றும் ஸ்விஸ் விசா வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. கனடாவில் இதுவரை கிட்டத்தட்ட 8 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 20,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் புதிதாக 4,500க்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகியுள்ளன.