தமிழகத்தில் ஒரே ஆண்டில் லட்சத்தை தாண்டிய புற்றுநோய் பாதிப்பு
தமிழகத்தில் ஒரே ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டி உள்ளது.
லட்சத்தை தாண்டிய புற்றுநோய்
இந்த ஆண்டு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தினால் பாராளுமன்றத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல் சமர்ப்பிக்கபட்டது.
இதில் ஒரே ஆண்டில் பற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டி உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் 2025ம் ஆண்டு புள்ளி விபரங்கள் படி மாநிலத்தில் புதிதாக புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,00,097ஆக உயர்ந்துள்ளது.

தற்போது இருக்கும் வாழ்க்கை முறையாலும் நோயை கண்டறியம் திறன் இல்லாததாலும் இந்த புற்றுநோய் மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீராக இருந்துள்ளது.
அதன்படி 2020-ல் 68,750, 2021-ல் 76,968 ஆகவும்; 2022-ல் 89,265 ஆகவும்; 2023-ல் 92,816 ஆகவும்; 2024-ல் 96,486 ஆகவும் இருந்துள்ளது.
ஆனால் 2025ம் ஆண்டில் ஒரு லட்சத்தையும் தாண்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து சென்றுள்ளது. இப்படி தொடர்ச்சியாக அதிகரித்து வரும் புற்றுநோய் பொது சுகாதார நடவடிக்கைகளுக்கான தேவைகளை எடுத்துக்காட்டுகிறது.

2025 ஆம் ஆண்டில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட நோயாளிகளில், பெண்கள் 53,542 பேரும், ஆண்கள் 46,555 பேரும் ஆவர். தமிழ்நாட்டில் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,09,097-ஐ எட்டியுள்ளது.
சென்னையில் 8505 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் கருப்பை, மார்பகம் உள்ளிட்ட புற்றுநோய்களால் 10,821 பேர் உயிரிழந்துள்ளனர்.