புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு நாக்கில் முடி வளர்ந்த சம்பவம் - அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்

Coloradowoman hairontongue
By Petchi Avudaiappan Jan 23, 2022 11:39 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

கொலராடோவில் புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு நாக்கில் முடி வளர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொலராடோவை சேர்ந்த 42 வயதான கேமரூன் நியூசம் என்ற பெண்ணுக்கு வினோத புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது செதிள் செல் கார்சினோமா என்ற  நாக்குடன் தொடர்புடைய அரிய வகை புற்றுநோய் எனவும் மருத்துருவர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

நாக்கில் உருவான புற்றுநோய் கட்டியை நீக்குவதற்கு கேமரூன் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் , அறுவை சிகிச்சையின் போது கேமரூனின் கால் திசுக்களால் புற்றுநோய் கட்டிகள் நீக்கப்பட்டது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் கால் திசுக்கள் மாற்றப்பட்ட பகுதியில் முடி வளர்ந்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.