பஞ்சு மீதான 1% சந்தை நுழைவு வரி ரத்து – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
tamilnadu
mkstalin
cotton
By Irumporai
வெளிமாநிலத்திற்கு கொள்முதல் செய்யப்படும் பஞ்சுக்கான 1% சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதல்வர் மு க ஸ்டாலின், தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று , நெசவு தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களைக் கருத்தில் கொண்டு பஞ்சு மீதான நுழைவு வரி 1% ரத்து செய்யப்படுவதாக கூறினார். முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு அதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்