முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து - அரசு அதிரடி அறிவிப்பு

BJP Karnataka
By Thahir Mar 27, 2023 05:36 AM GMT
Report

கர்நாடகாவில் முஸ்லீம்களுக்கான 4 சதவீத இடஓதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இட ஒதுக்கீடு அதிகரிப்பு 

நேற்று கர்நாடகா அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை,

முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து - அரசு அதிரடி அறிவிப்பு | Cancellation Of Reservation For Muslims

அப்போது அவர் பேசுகையில், லிங்காயத், ஒக்கலிகர்கள் உள்பட பல்வேறு சமூகத்தினர் தங்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டு வருகின்றனர்.

தலித் சமூகத்தில் உள் இடஒதுக்கீடு வேண்டும் என்று நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவர்களின் கோரிக்கை குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு செய்து அறிக்கை வழங்கியது.

அதன் அடிப்படையில் ஒக்கலிகர் சமூகத்திற்கு இடஒதுக்கீட்டு பட்டியலில் 2சி அந்தஸ்தும், லிங்காயத் சமூகத்திற்கு 2டி அந்தஸ்தும் வழங்கப்பட்டது.

அந்த சமூகங்களுக்கு தற்போது இட ஒதுக்கீடு பகிர்ந்து அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒக்கலிகர்களுக்கு 6 சதவீதமும், லிங்காயத் சமூகத்திற்கு 7 சதவீத இட ஒதுக்கீடும் வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தலித் சமூகத்தி்ற்கு 17 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் சிறிய சமூகங்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அந்த சமூகத்தில் வலதுசாரி சமூகங்களுக்கு 5½ சதவீதமும், இடதுசாரி சமூகங்களுக்கு 6 சதவீதமும் வழங்கப்படுகிறது.மீதமுள்ள 5½ சதவீதம் அந்த சமூகத்தின் பிரதான பிரிவுகளுக்கு கிடைக்கும்.

முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து 

2பி அந்தஸ்தில் உள்ள மத சிறுபான்மையினருக்கான (முஸ்லிம்) தனி இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது. அதாவது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

அதற்கு பதிலாக அந்த சமூகத்தினர் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவு(இ.டபிள்யூ.எஸ்.) இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படுவார்கள். அதில் 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கிறது.

முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து - அரசு அதிரடி அறிவிப்பு | Cancellation Of Reservation For Muslims

இதனால் முஸ்லிம் மக்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும். 2ஏ அந்தஸ்தில் உள்ள 15 சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதை மனதில் வைத்துக் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் வாக்குறுதி 

இந்த நிலையில், கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் நாங்கள் வென்று ஆட்சி அமைத்தால் இஸ்லாமியர்களுக்கான 4% இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்துவோம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.