‘நாங்க என்ன ஆடு மாடு-ஆ? ஏலத்தை நிறுத்துங்க’ - கொந்தளித்த சிஎஸ்கே வீரர்

robinuthappaagainstauction cancelauctionrobin draftmethodauctionno
By Swetha Subash Feb 22, 2022 04:30 PM GMT
Report

ஐபிஎல் ஏலம் வீரர்கள் மனதை பெரும் அளவில் பாதிக்கப்படுத்துவதாக ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.

சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா, வீரர்களை ஏலத்தில் எடுக்கும் முறையை நிறுத்திவிட்டு புதிய முறையை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐபிஎல் ஏலம் வீரர்கள் மனதை பெரும் அளவில் பாதிக்கப்படுத்துவதாக கூறியுள்ள உத்தப்பா,

“தேர்வு எழுதி, அதற்கான முடிவுக்காக காத்து கொண்டு இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு சென்றவர்கள் தான் திறமையானவர்கள் என்றும், ஏலம் போகாதவர்கள் திறமையில்லாத வீரர்கள் என்றும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாக” வேதனை தெரிவித்துள்ளார்.

‘நாங்க என்ன ஆடு மாடு-ஆ? ஏலத்தை நிறுத்துங்க’ - கொந்தளித்த சிஎஸ்கே வீரர் | Cancel Auction Bring Draft Method Robin Uthappa

தொடர்ந்து பேசிய அவர்,

“ஐபிஎல் ஏலத்தில் தான் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்று தனது மகன் பிரார்த்தனை செய்ததாக கூறினார். தம்மை பொறுத்தவரை சிஎஸ்கே அணிக்காக நான் விளையாட வேண்டும் என்று நினைத்தேன்.

சிஎஸ்கே அணியில் இருக்கும் போது தான் உரிய மரியாதை கிடைக்கிறது. நான் இன்னும் சிறப்பாக விளையாடுகிறேன். என்னை கேட்டால் ஐபிஎல் மெகா ஏலத்தை நிறுத்த வேண்டும்.

எங்களை ஒரு கால்நடைகள் போல் ஏலம் விடுகிறார்கள். ஏலத்தில் நமது பெயர் முதலில் இருந்தால் அதிக பணம் கிடைக்கும். இல்லையென்றால் குறைந்த பணம் தான் கிடைக்கும்.

இதில் எங்கே சமம் வாய்ப்பு கிடைக்கிறது? ஐபிஎல் ஏலத்தை கைவிட்டு, அதற்கு பதிலாக டிராஃப்ட் முறையை கொண்டு வர வேண்டும்.

‘நாங்க என்ன ஆடு மாடு-ஆ? ஏலத்தை நிறுத்துங்க’ - கொந்தளித்த சிஎஸ்கே வீரர் | Cancel Auction Bring Draft Method Robin Uthappa

டிராஃப்ட் முறை தான் வீரர்களுக்கு மரியாதைக்குரியதாக இருக்கும். இது குறித்து சம்பந்தபட்டவர்கள் ஆலோசனை செய்ய வேண்டும்.

நமது ஆட்டத்தை வைத்து தான் திறமையை கணக்கிட வேண்டுமே தவிர, எவ்வளவு ஏலத்திற்கு சென்றோம் என்பதை வைத்து கணக்கிட கூடாது.

ஏலத்தில் விலை போகாத வீரர்களின் நம்பிக்கையே உருக்குலைந்து இருக்கும். அவர்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.” என கோரிக்கை விடுத்துள்ளார்.