”மது விலக்கு, நீட் தேர்வு ரத்து” காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை பீட்டர் அல்போன்ஸ் தலைமையிலான குழு வடிவமைத்துள்ளது.
இதில் முக்கியமாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் உள்ளாட்சிக்கு அதிக அதிகாரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய தொழில்முனைவோருக்கு ஐந்து ஆண்டுகள் வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற மேலவை மீண்டும் அறிமுகப்படுத்தப்படும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், ஆணவக் கொலைகளுக்கான சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சிறப்பு சட்டங்கள் இயற்றப்படும், மீனவர்களை பழங்குடிகள் பட்டியலில் இணைப்போம், பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.