கட்டிப்பிடி வைத்தியம்... ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவா? - ருசிகர தகவல்!

Canada
By Sumathi Jul 15, 2022 10:13 AM GMT
Report

கனடாவின் மாண்ட்ரியாலைச் சேர்ந்த 30 வயதான ”ட்ரெசர்”என்று அழைக்கப்படும் ட்ரெவர் ஹூடன் ”கட்டிப்பிடிக்கும் தெரப்பி”யை வணிகமாக செய்து வருகிறார்.

கட்டிப்பிடிக்கும் தெரப்பி

ஒரு மணி நேரத்திற்கு 75 யூரோக்களை இதற்கான கட்டணமாக அவர் வசூலிக்கிறார். மேலும், மற்றவர்களுடன் பழக சிரமப்படுபவர்களுக்கு “கனெக்சன் கோச்சிங்”போன்ற சேவைகளையும் வழங்குகிறார்.

கட்டிப்பிடி வைத்தியம்... ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவா? - ருசிகர தகவல்! | Canadian Youth Charging For Hugs

10 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களுக்கு இடையேயான பிணைப்பு குறித்த அறிவியல் பின்புலத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தார். மனிதர்களுக்கு இடையேயான தொடர்புகள் குறித்து ஆராயும் நோக்கத்திலேயே இந்த வணிகத்தையும் ட்ரெவர் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,

இந்த வணிகம் குறித்து பலருக்கும் புரிதல் இல்லை. இது எந்த விதத்திலும் பாலியல் தொழில் சார்ந்தது இல்லை, முழுக்க முழுக்க பாசத்துடன் கூடிய அரவணைப்பு மட்டுமே. இதை தவறாக புரிந்து கொண்டவர்கள் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்,

கட்டிப்பிடி வைத்தியம்... ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவா? - ருசிகர தகவல்! | Canadian Youth Charging For Hugs

ஒரு நபரை உங்களுக்காக நேரம் ஒதுக்குவதற்காகவே பணியமர்த்தியிருக்கிறீர்கள். ஒரு மணி நேரம் தொடுதல் மூலம் அரவணைப்பாக கட்டிபிடித்துக்கொள்வது எப்படியான உணர்வை கொடுக்கும் என்று.

கனடா இளைஞர்

குழப்பத்துடன் இருக்கும் நபர்களுக்கு என்னால் இயன்ற பாதுகாப்பான, அமைதியான சூழலலை உருவாக்கி கொடுக்க முயல்கிறேன். இது பற்றி புரிந்துகொள்ள உளவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த புரிதல் வேண்டும்.

இந்த நிறுவனத்தில் பல சேவைகள் இருந்தாலும், அதிகப்படியான மக்கள் கட்டிப்பிடிக்கும் தெரப்பியை தான் தேர்வு செய்கிறார்கள். எங்களை தேடி வருபவர்களுக்கு என்ன தேவை,

என்ன விரும்புகிறார்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஏற்ற சேவையை சரியான எல்லையில் வழங்குகிறோம். இதை பற்றிய முழுமையாக தெரிந்தால் மக்கள் இதில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்” என்கிறார் ட்ரெவர்.