அழுதபடி உரையாற்றிய ஜஸ்டின் ட்ரூடோ - நாடாளுமன்ற நாற்காலியை எடுத்து சென்றது ஏன்?
ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் இருந்து நாற்காலியை தூக்கிச் செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கனடா
கனடா நாட்டின் பிரதமராக பதவி வகித்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த சில மாதங்களுக்கு முன் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்திருந்தார். மேலும் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை பிரதமராக தொடருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சுமார் ஒண்ரரை மாதங்களாக நடைபெற்று வந்த ஆலோசனை கூட்டத்தில் இங்கிலாந்து & கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் மார்க் கார்னி கடந்த 9-ந் தேதி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று லிபரல் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோவுக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.
அப்போது பேசியவர் நம் நாடு எப்போதும் ஒரு பெண்ணின் தேர்ந்தெடுக்கும் உரிமையை பாதுகாத்து வரும் நாடு ஆகும் என்று தெரிவித்தார். நான் பிரதமராக இருந்த நாட்களில். நான் கனடியர்களை முதன்மையாகக் கருதினேன். எனக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது என்பதை அதன்மூலம் உறுதிசெய்திருக்கிறேன்.
ஜஸ்டின் ட்ரூடோ
இந்த அரசின் கடைசி நாட்களில் கூட, கனடியர்களை நான் ஏமாற்றவில்லை. அவர்களுக்கான எதிர்காலத்தை வடிவமைப்பேன் என்பதை நிரூபித்துள்ளேன்" என்று உணர்ச்சிவயப்பட்டு அழுதபடி உரையாற்றியதுடன் விடை பெற்றார். பின்னர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறினார்.
அப்போது அவர் தனது நாற்காலியை எடுத்துச் சென்றுள்ளார். கையில் நாற்காலியை வைத்துக் கொண்டு நாக்கை வெளியே நீட்டியபடி புகைப்படத்துக்கு 'போஸ்' கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.