கனடாவில் ஹூவாய் 5ஜி : சில வாரங்களில் அனுமதி

Canada 5G Huawei
By Irumporai Sep 29, 2021 09:59 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் 4ஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய் 5ஜி சேவை வழங்கி வருகிறது.

இந்த  நிலையில் 5ஜியை பயன்படுத்துவதால், தங்களுடைய நாட்டின் ரகசியங்கள் திருடப்படுவதாக சில நாடுகள் கூறி வருகின்றன குறிப்பாக 5ஜி சேவை வழங்கும் ஹூவாய் நிறுவனத்தின் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

இந்தியா சோதனைக்கு மட்டும்தான் அனுமதி வழங்கியுள்ள நிலையில் கனடாவில் 5ஜி நெட்வொர்க் வழங்க ஹூவாய் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து சில வாரங்களில் முடிவு செய்யப்படும்' என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஆனால், கனடாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களான பெல் கனடா, டெலஸ் கார்பரேசன் போன்ற நிறுவனங்கள் 'ஹூவாய் 5ஜி நெட்வொர்க்கை பயன்படுத்தமாட்டோம்' எனத் தெரிவித்தள்ளது குறிப்பிடத்தக்கது.