EX மேல கடுப்பா - காதலர் தினத்தில் கரப்பான் பூச்சிகளுக்கு பெயரிட அழைப்பு!
காதலர் தினத்தை முன்னிட்டு கரப்பான் பூச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் பெயரிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலர் தினம்
கடனாவின் டொராண்டோ மிருகக்காட்சி சாலை புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில், காதலர் தினத்தையொட்டி சுற்றுலாப்பயணிகள் இந்த மிருகக்காட்சி சாலையில் உள்ள வளர்ப்பு கரப்பான் பூச்சிகளுக்கு பெயரிடலாம்.

மேலும், "பெயரிட விரும்பும் நபர்கள் மிருகக்காட்சி சாலைக்கு ரூ.2,033 நன்கொடையாக வழங்க வேண்டும். இப்படி வழங்கும் நபர்கள் தாங்கள் விரும்பும் பெயர்களை வைத்துக்கொள்ளலாம். ஆனால் கௌரவமான பெயர்களை வைக்க வேண்டும்.
கரப்பான் பூச்சிக்கு பெயர்
இவர்கள் வழங்கும் பெயர்கள் டிஜிட்டல் வடிவிலான சர்டிஃபிகேட்டாக பயணியின் பெயருடன் வழங்கப்படும்" என்று கூறியுள்ளது. பெரும்பாலான நபர்கள் தங்கள் முன்னாள் காதலி/காதலன் பெயரைதான் கரப்பான் பூச்சிகளுக்கு வைத்து வருகின்றனர்.
தொடர்ந்து, "உங்கள் நண்பர்கள், முதலாளி, முன்னாள் நண்பர்கள், உறவினர்கள் என யாருடைய பெயரை வேண்டுமானாலும் கரப்பான் பூச்சிக்கு வழங்கலாம். வெறுக்கத்தக்க பெயர்கள் மற்றும் அவதூறுகளை தூண்டும் வகையில் உள்ள பெயர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு டிவிட்டரில் பரவிய நிலையில் நெட்டிசன்கள் சிலர் எதிர்ப்பையும், பலர் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.