தாலிபான்களை எதிர்க்கும் கனடா பிரதமர் - செய்தியாளர் சந்திப்பில் நிகழ்ந்த சம்பவம்
ஆப்கானிஸ்தான் அரசாக தலிபான்களை அங்கீகரிக்கும் திட்டமில்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளது
சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதால் தாலிபான்கள் 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
பல நாடுகளில் தாலிபான் அமைப்பினர் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் புதிய ஆப்கான் அரசை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது. இதனிடையே நாங்கள் எந்தவித எதிரிகளையும் சம்பாதிக்க விரும்பவில்லை. சர்வதேச சமூகம் எங்களை அங்கீகரிக்க வேண்டும் என தலிபான்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பேசிய அவர், தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்கும் திட்டம் கனடாவுக்கு இல்லை என்றும்,ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பலவந்தமாக தூக்கியெறிந்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை அவர்கள் கைப்பற்றி இருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
கனடா நாட்டு சட்டத்தின்படி தலிபான்கள் பயங்கரவாத அமைப்பாகவே அங்கீகரிக்கப்படுவார்கள் என ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.