உக்ரைனுக்கு நாங்க இருக்கோம் , கரம் கொடுக்கும் கனடா : ஆயுதங்கள் வழங்க முடிவு

Trudeau RussiaUkraineCrisis Canadadonateweapons
By Irumporai Feb 16, 2022 03:44 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உக்ரைன் மீது ரஷ்யா படைகளை குவித்துள்ளதால் அங்கு போர் பதற்றம் நிலவிவருகிறது , இதனால் அங்கு உள்ள வெளிநாட்டு மக்கள் தூதரக அதிகரிகள் வெளியேறிவருகின்றனர்.

ரஷ்யா படைகளைக் குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. 

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய போர்படைகள் குறித்த  செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி உள்ளன. உக்ரைன் எல்லைப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ரஷ்ய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

[

இந்த நிலையில் ரஷ்யாவிற்கு  எதிராக உகரைன் தற்காத்துக் கொள்ள கனடா இராணுவ ஆயுதங்களை அனுப்ப உள்ளதாகவும் சுமார் 500 மில்லியன் டாலர்களை கடனாக வழங்குவதாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

மேலும்,  நட்பு நாடுகளுடனான ஆலோசனைக்கு பிறகு 7.8 மில்லியன் டாலர் மதிப்புள்ள இராணுவ ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவதற்கு தாம் ஒப்புதல் அளித்துள்ளேன் என்று ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டும் என்பதுததான் கனடா மற்றும் நடப்பு நாடுகளின் நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்.