படிப்பு, வேலை, கணவன் மனைவியாக செல்ல சிக்கல் - புதிய விசா முறையால் செக் வைத்த கனடா!
கனடா விசா விதிமுறையில் கட்டுபாட்டை அறிவித்துள்ளது.
கனடா விசா
கனடா நாட்டிற்கு எக்கச்சக்கமான வெளிநாட்டாவர்கள் குடிபெயர்ந்துள்ளார்கள். இதனால், மக்கள் தொகையில் மிகப்பெரிய வித்தியாசம் ஏற்பட்டதாகவும், கனடா நாட்டு மக்களுக்கான வேலை வாய்ப்பு குறைவாதாகவும் கூறப்பட்டது.
எனவே, வெளிநாடுகளில் இருந்து கனடாவிற்கு வேலை, படிப்பிற்காக வருபர்களுக்கான விசா விதிமுறையை மாற்றி அறிவித்துள்ளது. அதன்படி, கனடாவில் நிரந்தர குடியிறுப்பிற்கான கட்டணம் சுமார் 10 முதல் 15 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
18 வயதிற்கு குறைவானவர்களுக்கு இந்த வரியில் இருந்து விலக்களிக்கிறது. கல்வி விசா மூலமாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு வழங்கப்படும் விசாவைத் தடைசெய்ய தீர்மானிக்கபட்டுள்ளது. கணவன் அல்லது மனைவிக்கு வழங்கப்படும் Spousal Visa முறையை கடுமையாக்கியுள்ளது.
புதிய விசா முறை
இது சென்ற மார்ச் 19 முதல் செயல்பாட்டிற்கு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், 10 பிரிவில் உயர்கல்வி படித்து செல்லுபடியாகும் மாணவ விசா கொண்டுள்ள நபரின் கணவன் அல்லது மனைவிக்கு வேலை விசா வழங்கப்படும்.
வெளிநாடுகளில் இருந்து வேலை விசா மூலமாக கனடா வருபவர்கள் அங்கு சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுக்க, வேலை விசா தொடர்பான சில சட்டங்களும் திருத்தப்பட்டுள்ளன. அங்கீகரிக்கபடாத பல்கலை. யில் படிக்கும் மாணவரின் ஜோடிக்கு வேலை விசா கிடைக்காது.
2022ல் நடந்த கணக்கெடுப்புப்படி சுமார் 1 லட்சத்தி 18 ஆயிரம் இந்திய குடும்பங்கள் கனடாவில் வசிக்கின்றனர். இது அங்குள்ள மக்கள் தொகையில் சுமார் 27 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.