மொத்தம் 49 இளம்பெண்கள்.. நபர் செய்த கொடூர காரியம் - இறுதியில் நேர்ந்த சோகம்!
49 பெண்களை கொலை செய்த சீரியல் கில்லர் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பெண்கள் கொலை
கனடாவின் வான்கூவர் நகரில் கடந்த 1999 - 2000 காலகட்டத்தில் தொடர்ச்சியாக பல இளம்பெண்கள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே சட்ட விரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாக போர்ட் கோக்விட்லாம் பகுதியில் பன்றி பண்ணை நடத்தி வந்த ராபர்ட் பிக்டன் (71) என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையின்போது பிரிட்ஜில் ஒரு பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், 49 பெண்களை ராபர்ட் பிக்டன் வெட்டிக்கொன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.
கைதி உயிரிழப்பு
மேலும், கொலை செய்யப்பட்ட பெண்களின் உடலை வெட்டி பன்றிகளுக்கு உணவாக அளித்ததும் கண்டறியப்பட்டது. அப்போது ராபர்ட் “நான் இதுவரை 49 பெண்களைக் கொன்றுள்ளேன்.
இன்னும் ஒருவரை கொன்றால் 50 ஆகிவிடும்” என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த மாதம் 19-ம் தேதி ராபர்ட்டுக்கும் சிறையில் உள்ள சக கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கைதிகள் பலர் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராபர்ட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.