கனடா பள்ளி துப்பாக்கிச்சூட்டின் தாக்குதல்தாரி ஒரு திருநங்கை! வெளியான முழு விபரம்

Canada Crime World
By Vinoja Feb 12, 2026 10:12 AM GMT
Report

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ளர் ரிட்ஜ்(Tumbler Ridge) என்ற இடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தாக்குதல்தாரி உட்பட 10 போ் பலியாகியதுடன், 25-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

துப்பாக்கிச் சூடு நடத்திய தாக்குதல்தாரி பிறகு தன்னையும் சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

வான்கூவரில் இருந்து சுமாா் 1,000 கி.மீ. தொலைவில் உள்ள மலைப்பாங்கான டம்ப்ளா் ரிட்ஜ் நகரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கனடா பள்ளி துப்பாக்கிச்சூட்டின் தாக்குதல்தாரி ஒரு திருநங்கை! வெளியான முழு விபரம் | Canada School Shot Crime Shocking Reasons

பொலிஸார் விசாரணை

இந்நிலையில், தற்போது  குறித்த தாக்குதலில் ஈடுபட்டது ஜெஸ்ஸி வான் ரூட்செலார் என்பதும், இவர் பள்ளியை பாதியில் நிறுத்திய திருநங்கை என்பதும் விசாரணையின் மூலம்  கண்டுப்பிடிக்கப்ட்டுள்ளது. 

தான் முன்பு படித்த பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பே, வீட்டில் தன்னுடைய தாய் மற்றும் சகோதரனையும் அவர் சுட்டுக் கொலை செய்திருக்கின்றார் என்பது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தப் பள்ளிக்கு அருகேயுள்ள ஒரு குடியிருப்பில் அவரது தாயும், சகோதரனும் சடலமாகக் கண்டெக்கப்பட்டனர். இவரது குடும்பப் பின்னணியை காவல்துறையினர் ஆராய்ந்து வருகிறார்கள்.

கனடா பள்ளி துப்பாக்கிச்சூட்டின் தாக்குதல்தாரி ஒரு திருநங்கை! வெளியான முழு விபரம் | Canada School Shot Crime Shocking Reasons

முதல் கட்ட விவாரணையில், அவரது பாட்டி சமூக வலைத்தளத்தில் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட புகைப்படங்களில், தன்னுடைய பேரன் ஜெஸ்ஸிக்கு 14வது பிறந்தநாள் வாழ்த்துகள் என்று பதிவிட்டு பல புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.

அதில் ஒரு புகைப்படத்தில் அவர் கையில் துப்பாக்கியை ஏந்தி குறிபார்க்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.இதன் அடிப்படையில், ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்தான் ஜெஸ்ஸி என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவருக்கு மனநல பிரச்னை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.