ராஜபக்சே சகோதரர்கள் கனடாவிற்குள் நுழைய தடை - மனித உரிமை மீறல்!

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sri Lanka Canada
By Sumathi Jan 11, 2023 07:16 AM GMT
Sumathi

Sumathi

in கனடா
Report

அதிபர்கள் கோத்தபய ராஜபக்சே, மகிந்தா ராஜபக்சே உள்ளிட்ட 4 பேருக்கு கனடாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்சே சகோதரர்கள்

இலங்கையில் தொடர்ந்து நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியால், மக்களின் புரட்சி வெடித்தது. அதனை தொடர்ந்து, அங்கு ஆட்சியில் இருந்த ராஜபக்சே சகோதரர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பதவியில் இருந்து விலகினார்கள்.

ராஜபக்சே சகோதரர்கள் கனடாவிற்குள் நுழைய தடை - மனித உரிமை மீறல்! | Canada Sanctions Gotabaya And Mahinda Rajapaksa

இதில், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஜூலை மாதமும், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மே மாதமும் ராஜினாமா செய்தார்கள். இதற்கு பின் ரணில் விக்ரமசிங் அதிபராக பொறுப்பேற்றாா்.

கனடாவில் தடை

இந்நிலையில், இலங்கையின் முன்னாள் அதிபர்கள் ஆன கோத்தபய, மகிந்த ராஜபக்சே உள்பட 4பேரை கனடாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதனை தொடர்ந்து, கனடாவில் உள்ள 4பேரின் சொத்துக்கள் மற்றும் நிதி செயல்பாடுகள் முடக்கப்படும் என அறிவித்துள்ளது.

விடுதலை புலிகளுக்கு எதிரான போரின்போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக 4பேர் மீதும் கனடா நாடு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.