கனடாவில் இந்திய மாணவர்களின் கல்வி பாதிப்பு?

canadaprotestaffectsindians indianstudentseducation canadaprotest
By Swetha Subash Feb 20, 2022 01:22 PM GMT
Report

கொரானா கட்டுப்பாடு காரணமாக கனடாவில் போராட்டம் வலுவடைந்திருப்பதால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் இந்திய மாணவர்கள் கல்வி பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

கனடாவில், கொரோனா பரவலை தடுக்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை எதிர்த்து நாடு தழுவிய அளவில், போராட்டம் நடந்து வருகிறது.

கனடாவின் கியுபெக் மாகாணத்தில் உள்ள மூன்று கல்லுாரிகளில், இந்திய மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர்.

பல மாணவர்கள், கல்லுாரி விடுதிகளில் தங்கி படிக்கின்றனர். இந்த தொடர் போராட்டம் காரணமாக, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் பலரும், இந்திய துாதரகத்தில் புகார் செய்துள்ளனர்.

மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது குறித்து, கனடா நாட்டு கல்வித்துறையிடம் பேசி வருவதாகவும், இந்திய மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை ,

அவர்களுக்கு கல்லூரிகளின் நிர்வாகம் திரும்பி வழங்க வலியுறுத்தி வருவதாகவும், கனடா தலைநகர் ஒட்டவாவில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.