பிங்க் நிற ஹை ஹீல்ஸ் அணிந்து வந்த ஆண் எம்.பிகள்; ஏன்? வைரலாகும் வீடியோ
நாடாளுமன்றத்தில் பிங்க் நிற ஹை ஹீல்ஸ் அணிந்து வந்த ஆண் எம்.பிகளின் வீடியோ வைரலாகி வருகிறது.
பிரச்சாரம்
கனடாவில் பெண்கள் தங்குமிடத்திற்கு நிதியை திரட்டுவது பாலின அடிப்படையில் வன்முறை குறித்து ஆண்களும், சிறுவர்களும் அறிந்து கொள்வதை நோக்கமாக கொண்டு " ஹோப் இன் ஹை ஹீல்ஸ்" என்னும் பிரச்சாரம் நடந்தது.
இது கடந்த 4 வருடங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் கனடா நாட்டின் எம்.பிகள் நாடாளுமன்றத்திற்கு பெண்களின் அடையாளமாக உள்ள பிங்க் நிறத்தில் ஹீல்ஸ் அணிந்து வந்தனர்.
வைரல் வீடியோ
மேலும் இவை பெண்களுக்கு எதிராக ஏற்படும் வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு ஹீல்ஸ் அணிந்து வந்து பிரச்சாரத்தை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.
Canadian politicians have decided to fight "against gender violence" by wearing pink high heels. pic.twitter.com/lkbFrqIp6j
— Spriter (@Spriter99880) April 21, 2023