பதவியேற்ற 10 நாட்களில் நாடாளுமன்றத்தை கலைத்த பிரதமர் - கனடாவில் நடப்பது என்ன?
கனடா பிரதமர் பதவியேற்ற 10 நாட்களில் நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார்.
கனடா பிரதமர்
கனடா நாட்டின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் பதவியில் இருந்து விலகுவதாகக் அறிவித்தார். இதையடுத்து கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னே கடந்த வாரம் பொறுப்பேற்றார்.
பிரதமராகப் பொறுப்பேற்ற மார்க் கார்னே 10 நாட்களிலேயே கனடா நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் ஏப்ரல் 28ஆம் தேதி தேர்தல் நடத்தவும் அந்நாட்டு கவர்னர் ஜெனரலிடம் பரிந்துரைத்துள்ளார்.
மேலும் வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்கா விடுத்துள்ள மிரட்டலையும், கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணைக்க உள்ளதாக அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதற்கு எதிர்வினையாற்ற கனடாவில் வலுவான ஒரு அரசு அமைவது மிகவும் அவசியம் என்று தெரிவித்தார்.