கனடாவில் 120 டிகிரியை தாண்டிய வெப்பம்.. 200 பேர் பலி..
கனடாவில் வெப்ப அலை காரணமாகக் கடந்த 3 நாட்களாக வெப்பம் 120 டிகிரியை கடந்துள்ளது.
பருவநிலைமாற்றம் காரணமாக உலகின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தென் துருவம், வட துருவம் என இரு துருவங்களிலும் பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருகிறது.
இதனால் கடல் நீரும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பெரும்பாலும் வெப்பநிலை குறைவாகவே இருக்கும் கனடா நாட்டில் கடந்த 3 நாட்களாகவே வெப்ப நிலை 120 டிகிரியை கடந்துள்ளது.
கடும் வெப்பம் காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 நாட்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கொலம்பியா, ஆல்பர்ட்டா உள்ளிட்ட பல மாகாணங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.