நடிகை மீனா பற்றி மேடையில் இப்படி பேசலாமா? - நடிகை தேவயானி பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
நடிகை மீனா பற்றி மேடையில் நடிகை தேவயானி பேசியதை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வைரலாகும் தேவயானியின் பேச்சு
தேவயானி தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முக்கிய காரணம் மீனா தான் என்றும் தான் ஒரு மீனாவின் தீவிரமான ரசிகை என்றும் தெரிவித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீனா. பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். நடிகை மீனா தொடர்ந்து சினிமாவில் கிட்டத்தட்ட 40 வருடங்களாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை மீனா பற்றி தேவயானி நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாழ்க்கையில் முன்னேற முடியாது
மேடையில் நடிகை தேவயானி பேசுகையில், நான் தமிழ் இண்டஸ்ட்ரியில் 1994- 1995 ல் நுழையும் போது மீனாவை பார்த்துவிட்டு அவருடைய ரசிகையாக தான் இங்கே வந்தேன்.
நான் உங்களுடைய ரொம்ப பெரிய ஃபேன் உங்களுடைய அழகுக்கும், உங்களுடைய ஹார்ட் வொர்க், உங்களுடைய அழகான கண்ணு எல்லாத்துக்குமே நான் ஒரு ரசிகை.
எவ்வளவோ படங்கள், எவ்வளவோ பிரச்சனைகள் எல்லாவற்றையும் நீங்க அழகா கடந்து வந்திருக்கீங்க. அதுபோல மீனா இந்த அளவிற்கு வாழ்வதற்கு அவருடைய அம்மா தான் முக்கியமான அம்மா இல்லன்னா மீனா மட்டுமல்ல எந்த நடிகையாலும் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற முடியாது.
அம்மாவும், அப்பாவும் கண்டிப்பா ஒருத்தங்களுக்கு உறுதுணையா இருந்தால் தான் அவங்களால வெற்றி பெற முடியும்.
பெற்றோர் தான் எல்லாமே
என்னுடைய அம்மாவும் அப்பாவும் எங்களுக்கு எவ்வளவோ சேக்ரிஃபைஸ் பண்ணி இருக்கிறதால தான் நாங்க இந்த இடத்துல வந்து நிற்கிறோம்.
அது மீனா மேடத்தின் அம்மாவாக இருந்தாலும் சரி, ராதிகா மேடத்தின் அம்மாவா இருந்தாலும் சரி எல்லாருடைய அம்மாவாக இருந்தாலும் அவங்க தான் எல்லாமே என்று கூறி இருக்கிறார்.
அதுபோல நடிகை மீனாவின் மகள் நைனிகாவையும் பற்றி தேவயானி மேடையில் பெருமையாக பாராட்டி இருக்கிறார். உன்னுடைய இன்டர்வியூ எல்லாம் நான் பார்த்தேன்.
நீ அதில் அவ்ளோ அழகா பேசி இருந்த. எல்லாருடைய மனசையும் நீ டச் பண்ணிட்ட என்று நடிகை தேவயானி பேசியுள்ளார்.