கோடை காலங்களில் வெந்தயம் சூட்டை அதிகரிக்குமா? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்

Fenugreek leaves Healthy Food Recipes
By Sakthi Raj May 16, 2026 11:12 AM GMT
Report

நாம் எந்த ஒரு பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்றாலும் அதை சரியான முறையில் சரியான நேரத்தில் எடுத்தால் மட்டுமே அதற்குரிய பலனை பெற முடியும்.

அப்படியாக, நம்முடைய சமையல் அறையில் உள்ள மசாலா பொருட்கள் நம்முடைய உணவின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் நம்முடைய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியதாக இருக்கிறது.

அதில் ஒன்று வெந்தயம். அதாவது, ஆயுர்வேதத்தின் படி வெந்தயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது. பொதுவாக, வெந்தயம் ஒருவருடைய உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. அதை போல் செரிமானத்தை மேம்படுத்துகிறது, சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது, வாய்வு தொல்லைகளிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது.

இருப்பினும் வெந்தயத்தை சரியான முறையில் எடுத்துக் கொண்டால் மட்டுமே நமக்கு நன்மை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் வெந்தயத்தை எப்படி எடுத்துக் கொள்வது என்பதை பற்றி பார்ப்போம்.

கோடை காலங்களில் வெந்தயம் சூட்டை அதிகரிக்குமா? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள் | Can We Take Fenugreek During Summer Season

கோடை காலங்களில் வெந்தயத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது அவை நம் உடல் வெப்பத்தை அதிகரிக்கிறது. வெந்தயம் இது வாத மற்றும் கப தோஷங்களை சரி செய்ய பயன்படுகிறது. ஆனால், கோடை காலத்தில் உடலில் இருக்கக்கூடிய பித்த தோஷத்தை அதிகமாக்கும் என்று சொல்கிறார்கள்.

அதனால் கோடை காலங்களில் அதிகப்படியான வெந்தயத்தை எடுத்துக் கொள்வது நம்முடைய உடல் வெப்பத்தை அதிகரிப்பதோடு சில கூடுதல் பிரச்சனைகளையும் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதாவது கோடை காலங்களில் நம்முடைய உடலில் பித்த தோஷம் அதிகமாக இருக்கும்.

கோடை காலங்களில் தவறியும் இஞ்சி பூண்டு வெங்காயம் சாப்பிடக்கூடாதாம்

கோடை காலங்களில் தவறியும் இஞ்சி பூண்டு வெங்காயம் சாப்பிடக்கூடாதாம்

அந்த நேரங்களில் நாம் வெந்தயத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது ஒரு சிலருக்கு வயிற்றில் எரிச்சல், அமிலத்தன்மை, மலச்சிக்கல் மற்றும் அசௌகரியம் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம். மேலும், வெந்தயம் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுவதால் நீரழிவு நோய் உள்ளவர்கள் அடிக்கடி இந்த வெந்தயத்தை பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் கோடைகாலத்தில் உடலின் நிலைமை மாறுபடுவதால் வெந்தயத்தை உட்கொள்ளும் பொழுது உடல் பலவீனம் அடைதல், தலை சுற்றல் அல்லது குறைந்த ரத்த சர்க்கரை அளவு போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம். ஆதலால் நீரழிவு நோய் உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்ளும் பொழுது மிகவும் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.

கோடை காலங்களில் வெந்தயம் சூட்டை அதிகரிக்குமா? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள் | Can We Take Fenugreek During Summer Season

நீங்கள் கோடை காலங்களில் வெந்தயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் வெந்தய விதைகளை இரவு முழுவதும் தண்ணீர் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை குடுப்பது நல்ல பலன் கொடுக்கும். இது விதைகளின் சூட்டை குறைத்து உடல் அவற்றை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது.

அதேபோல் வெந்தய பொடியை தயிர் அல்லது மோருடன் கலந்து குடிப்பதும் ஒரு சிறந்த நிவாரணமாக அமையும். இது உடலை குளிர்விப்பதோடு வயிற்றில் ஏற்படுகின்ற எரிச்சலை குறைக்கிறது. இருப்பினும் கோடை காலங்களில் தவறியும் வெந்தய விதைகளை சுடுநீரிலோ அல்லது வேக வைத்தோ எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

வெந்தய விதைகள் வாயுவை குறைக்கவும், மூட்டு வலியை தணிக்கவும் செரிமானத்தை மேம்படுத்துவதற்கு உகந்ததாக இருந்தாலும் அதை குறைந்த அளவில் சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டால் மட்டுமே அதற்குரிய பலனை பெற முடியும். வெறும் வயிற்றில் முடிந்த அளவிற்கு வெந்தயத்தை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

உணவிற்கு பிறகு எடுப்பது மட்டுமே சிறந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரை ஆலோசித்த பிறகு இந்த வெந்தயத்தை எடுத்துக் கொள்வது சிறந்தது என்று பரிந்துரைக்கப்படுகிறது. என்னதான் எல்லா பொருட்களிலும் நிறைய சத்துக்கள் நிறைந்திருந்தாலும் அதை சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டால் மட்டுமே அதற்குரிய பலன்களை பெறலாம்.