நீங்கள் இரவு நேரத்தில் நூடுல்ஸ் சாப்பிடும் நபரா? இதை தெரிந்து கொள்ளுங்கள்
நூடுல்ஸ் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய உணவாக இருக்கிறது. அப்படியாக இந்த நூடுல்ஸ்சை நாம் இரவு நேரங்களில் எடுத்துக் கொள்ளலாமா என்பதை பற்றி பார்ப்போம். பொதுவாகவே, நூடுல்ஸில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கிறது.
அதை போல் கொழுப்புச்சத்தும் அதிகமாக இருப்பதால் அதை இரவு நேரங்களில் சாப்பிடும் பொழுது நமக்கு உடல் எடை அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்.

மேலும், இரவு நேரங்களில் நூடுல்ஸ் சாப்பிடும் பொழுது செரிமானம் செயல்பாடுகளில் மந்தமாக இருக்கலாம் என்றும் நூடுல்ஸ் போன்ற கனமான உணவுகளை சாப்பிடும் பொழுது அஜீரணம் மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அதேபோல் பொறித்த அல்லது அதிக எண்ணெய் சேர்க்கப்படும் நூடுல்ஸ்களை இரவு நேரங்களில் சாப்பிடும் பொழுது தேவையற்ற கொழுப்புகளை அவை சேர்க்கிறது. இதனால் குறுகிய காலத்தில் நமக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
பொதுவாக, இந்த நூடுல்ஸ் அதிக நேரம் பசியை கட்டுப்படுத்தினாலும் அதன் சத்துக்கள் குறைவாக இருப்பதால் உடலுக்கு தேவையான முழுமையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் செய்கிறது.

குறிப்பாக ஒருவர் தொடர்ந்து இரவு நேரங்களில் நூடுல்ஸ் சாப்பிட்டுக்கொண்டு வருகிறார் என்றால் அவர்களுக்கு தூக்கமின்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் வயிற்று எரிச்சல் செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
அதனால், இரவு நேரங்களில் எளிதாக செரிமானமாக கூடிய காய்கறிகள், உணவுகள், பழங்கள் போன்ற உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவது நன்மை தரும். ஆதலால், நூடுல்ஸ்களை நாம் அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாமே தவிர தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் பொழுது நிச்சயம் பிரச்சனை வருகிறது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.