கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் இரத்ததானம் செய்யலாமா? - அமைச்சர் விளக்கம்
கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் ரத்த தானம் செய்யலாமா? என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கமளித்துள்ளார்.
உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற சங்கம் இணைந்து நடத்தும் ரத்ததான முகாமில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் பங்கேற்று ரத்ததானம் அளித்தார்.
பிறகுசெய்தியாளர்களை சந்தித்த அவர் ,உலகம் முழுவதும் ரத்த தானம் அளிப்பவரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதாகவும் மேலும் இந்திய அளவில் தமிழகத்தைப் பொருத்தவரை ரத்த தானம் அளிக்கும் இடங்களில் தமிழகம் முதல் 4 இடங்களில் உள்ளதாகவும் கூறினார்.
மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் ரத்ததானம் செய்வதில் எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை என்றும், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 14 நாட்களுக்குப் பிறகு ரத்த தானம் அளிக்கலாம் என்றும் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.