இப்பவும் சான்ஸ் இருக்கு - MI அணி Play off வாய்ப்பு முடியல!!

Hardik Pandya Rohit Sharma Mumbai Indians IPL 2024
By Karthick Apr 28, 2024 09:22 PM GMT
Report

மும்பை அணி தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ளது.

மும்பை அணி

ஹர்திக் பாண்டியா கேப்டனாக கொண்டு விளையாடி வரும் மும்பை அணி பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றது. இது வரை அந்த அணி 9 போட்டிகளில் 3'இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

can-still-mi-get-to-play-off-possibilities

கடைசியாக நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 257 ரன்களை விரட்டி கடைசியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள அந்த அணியின் Play off வாய்ப்பு தற்போது கடும் சிக்கலை சந்தித்துள்ளது.

can-still-mi-get-to-play-off-possibilities

5 முறை சாம்பியனான மும்பை அணி, கடைசியாக 2020-இல் கோப்பையை வென்றது. இந்த ஆண்டும் அந்த அணியின் வாய்ப்பு குறைந்துள்ள நிலையில், மும்பை அணி Play off செல்ல நடக்கவேண்டிய விஷயங்களை தற்போது காணலாம்.

வாய்ப்பு 

முதல் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டது. அடுத்த 3 இடங்களுக்கு தான் பெரிய போட்டியே நிலவுகிறது. 9 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அடுத்தடுத்த ஆட்டங்களில் கொல்கத்தா(2 முறை), லக்னோ(2 முறை), சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(ஒரு முறை) எதிர்கொள்கிறது.

வெறும் சீன் தானா!! வேறு வழியில்லாமல் மும்பை நிர்வாகம் எடுத்த முடிவு - சிக்கலில் ஹர்திக்

வெறும் சீன் தானா!! வேறு வழியில்லாமல் மும்பை நிர்வாகம் எடுத்த முடிவு - சிக்கலில் ஹர்திக்

இதில், அனைத்து போட்டிகளிலும் மும்பை வென்றாக வேண்டும். ஆனால், கொல்கத்தா, லக்னோ, சன்ரைசரஸ் 3 அணிகளும் பலமான அணிகளே இருக்கின்றன.

can-still-mi-get-to-play-off-possibilities

முதல் 4 இடங்களில் இந்த அணிகளே முறையே (KKR, SRH, LSG) அணிகள் இருக்கும் காரணத்தால், மும்பை அணி 5 போட்டிகளையும் வென்று Play off சுற்றிற்கு செல்வது பெரும் கடினமான விஷயமாக இருக்கின்றது.