பிரதமர் மோடியின் Degree Certificate கேட்ட கேஜ்ரிவால் -நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்!
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
பிரதமர் மோடி
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் பிஏ, எம்ஏ பட்டப் படிப்பு சான்றிதழ் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு அப்போதைய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடியின் பிஏ, எம்ஏ பட்டப்படிப்பு சான்றிதழ்களைச் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
இதனையடுத்து தகவல் ஆணைத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், விவரம் கேட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார். அதன்பிறகு, தகவல் ஆணையர் ஆச்சார்யலு, பிரதமர் மோடியின் கல்வி சான்றிதழை வழங்க டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார்.
சான்றிதழ்
இதனை எதிர்த்து டெல்லி பல்கலைக்கழகம் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பரில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போது இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கு விசாரணை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பிரதமர் மோடியின் பிஏ பட்டப் படிப்பு சான்றிதழை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளோம். ஆனால் பொது அரங்கில் வெளியிட முடியாது என டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.