‘’நீங்கள் தலைகீழாக நின்றாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது’’: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தலைகீழாக நின்று மசோதா கொண்டு வந்தாலும் நீட் தேர்வு நடந்தே தீரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை:
நீட் பாஜகவை பொறுத்தவரை ஏழை மாணவர்களுக்கு எதிரானது கிடையாது. சமூக நீதிக்கு எதிரானது கிடையாது எனக் கூறினார். மேலும், தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்கள் பணம் கொடுக்காமல், அரசியல்வாதியை நாடாமல் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க முடியுமென்றால் அது நீட் தேர்வின் மூலமாக மட்டும் தான் முடியும் என்று கூறிய அண்ணாமலை.
தமிழகத்தில் ‘’திமுகவினர் தலைகீழாக நின்று மசோதாவைக் கொண்டுவந்தாலும் கூட நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. நீட் தேர்வு இருக்கும். அதேபோல, 3 வேளாண் சட்டங்களும் தமிழகத்தில் இருக்கும். அதை மாற்ற முடியாது'’என்று தெரிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகளின் தரம் உயர்வதை திராவிட முன்னேற்ற கழகத்தினால் தடுத்து நிறுத்த முடியாது. முடியாது என தெரிந்தும் தமிழகத்தில் திமுக அரசியல் செய்து கொண்டிருப்பதாக கூறிய அண்ணாமலை அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதற்கு உதாரணமாக நேர்மையான அரசியல் செய்து இருந்தால் திமுகவினர் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
யாரெல்லாம் நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து பொய் வாக்குறுதி கொடுத்தார்களோ அவர்கள் மீது காவல்துறை இயக்குனர் மற்றும் சேலம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவர்களாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தனுஷின் மரணத்திற்கு நாம் கொடுக்கும் நீதியாக இருக்கும் எனக் கூறினார்.