சி.ஏ.ஏ சட்டத்தில் குளறுபடிகளா..? விளக்குவாரா மு.க.ஸ்டாலின் - அண்ணாமலை கேள்வி
சி.ஏ.ஏ நாட்டில் அமலாகியிருக்கும் நிலையில், அதனை தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக உட்பட பல எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
அண்ணாமலை விளக்கம்
ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அச்சட்டம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் பேசியது வருமாறு,
சிஏஏ சட்டம் பற்றி தெரியாமல் பல்வேறு அரசியல் கட்சியினர் பேசி வருகின்றனர். மக்களை குழப்பி, திசை திருப்பும் வகையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன.
சிங்கள தமிழர்கள் 11 ஆண்டுகள் இங்கு தங்கி இருந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் தமிழகம் வந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது. அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் 31 மாவட்டங்களில் சிஏஏ அமல்படுத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் விளக்குவாரா..?
2019-ம் ஆண்டுக்கு பிறகு 1,414 பேருக்கு குடியுரிமை வழங்கியுள்ளோம்.சிஏஏ சட்டம் யாருக்கும் எதிரானது கிடையாது.இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உள்பட யாருடைய குடியுரிமையையும் பறிக்க முடியாது.
குடியுரிமை வழங்குவதற்கான அதிகாரம் மத்திய அரசிற்கு மட்டுமே உள்ளது. சட்டத்தில் என்ன குளறுபடி, தவறு உள்ளது என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.