100 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசய சந்திர கிரகணம்! இந்தியாவில் தென்படுமா? எங்கு எப்படி?
100 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சந்திரகிரகணம் நிகழ்கிறது.
சந்திர கிரகணம்
சூரியன் - சந்திரன் - பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கு பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும்போது தர்காலிகமாக சூரியஒளி சந்திரன் தடுத்து நிறுத்துகிறது.
அப்போது சந்திரனை சுற்றி சூரிய ஒளி போன்ற ஒரு வளையம் மட்டும் தெரியும். அதுவே சந்திர கிரகணம் ஆகும் அந்த நேரத்தில் பூமியில் சில இடங்களில் இருள் சூழ்ந்துவிடும். நடப்பாண்டில் முதல் சந்திரகிரகணம் பங்குனி உத்தர நாளில், ஹோலி பண்டிகை அன்று ஏற்படுவது மிகவும் அரிதான விஷயம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் தென்படுமா?
முன்னதாக இப்படி ஒரு சந்திர கிரகணம் நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் காணமுடியாது. ஆனால் அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், தெற்கு நார்வே மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் காண முடியும்.
இந்த கிரகணம், இந்திய நேரப்படி காலை 10:23 மணிக்கு தொடங்கி மாலை 03:02 வரை 4 மணி 36 நிமிடங்கள் வரை நீடிக்கும். இந்தியாவில் இது பகல் பொழுதில் நிகழ்வதால் நம்மால் பார்க்க இயலாது.
சூரிய கிரகணத்தைதான் வெறும் கண்களில் பார்ப்பது மிகவும் ஆபத்தானது. ஆனால், சந்திர கிரகணத்தை பார்க்கலாம்.
நாலா உயரமான மேகமூட்டம் எதுவும் இல்லாத இடத்தில் நின்று பார்த்தால் தெளிவாக சந்திரனை கிரகணம் காணலாம் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.