சர்க்கரை நோயாளிகள் பேரீச்சம்பழங்கள் சாப்பிடலாமா?
பொதுவாக டைப் 2 நீரிழவு நோயாளிகள் இனிப்புகள் சார்ந்த பழகாரங்கள் மற்றும் பேரீச்சம்பழம் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும் என்ற கருத்து இருந்து வருகிறது.
நல்லதொரு மாற்றம் தரும் பேரீச்சம்பழம்
இந்த நிலையில சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் பேரிச்சம் பழங்களை சாப்பிடுவது இரத்த குளுக்கோஸ்,கொழுப்பு உடல் எடை அல்லது ரத்த அழுத்தம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறப்பட்டுள்ளது.
சரியான வகையான பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை தடுக்கலாம்.
பேரீச்சம்பழம் குளுக்கோஸ், கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின், லிப்பிட் ப்ரொஃபைல் மற்றும் உடல் எடை ஆகியவற்றில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
பேரீச்சம்பழத்தில் கிளைசெமிக் இண்டெக்ஸ் ( ஜிஐ) 42.8 முதல் 74.6 வரை இருக்கும் மற்றும் கிளைசெமிக் சுமை (ஜிஎல்) 8.5 - 24 வரை இருக்கும்.
சர்க்கரை நோயாளிகள் அளவாக பேரீச்சம்பழங்களை உட்கொள்ளலாம்
பேரீட்ச்சம்பழம் கிளைசீமியா மற்றும் எடையில் எந்த மாற்றத்தையும் காட்டவில்லை. குளுக்கோஸ் ஸ்பைக்குகளுடன் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தாத சாதகமான குறியீடுகளைத் தவிர, பேரீச்சம்பழங்களில் புரதசத்து மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது.
பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் வயிறு நிறைவான உணர்வை ஏற்படுத்துகிறது. பசியை தாமதப்படுத்துகிறது மற்றும் சர்க்கரையின் நுகர்வை குறைக்கிறது.
நீரிழிவு நோயாளிகளின் பேரீச்சம்பழங்களை மிதமான அளவில் சாப்பிட வேண்டும். நீங்கள் சாப்பிடும் போது நல்ல பலன் கிடைக்கும்.
சவூதி அரேபியாவில் 2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ரூடாப் மற்றும் டேமரை ஒரு வருடத்திற்கு சாப்பிட்டு வருபவர்களிடம் இரத்த சர்க்கரை மற்றும் HbA1c அளவுகள் குறைவது கண்டறியப்பட்டது.
ஊட்டச்சத்துக்கள் அதிகம்
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன் அறிவிப்பின் படி, 100 கிராம் பேரீச்சம்பழத்தில் 311 கலோரிகள், 9 கிராம் நார்சத்து, 1 முதல் 3 கிராம் புரதம் மற்றும் செலினியம், மெக்னீசியம், தாமிரம், பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, பாஸ்பேட், போன்ற நுண்ணுாட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
உலர்ந்த அடர் பழுப்பு பேரிச்சம்பழங்கள் இரத்த சோகைக்கு நல்லது. ஏனெனில் 100 கிராம் பேரீச்சம்பழத்திற்கு 4.70 மி.கி. இரும்புசத்து உள்ளது.
பேரீச்சம்பழத்தில் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. அதாவது ஃபிளாவனாய்டுகள், பினாலிக் அமிலங்கள், ஐசோஃப்ளேவோன்கள், குர்குமின், ஐசோதியோசயனேட்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்றவை உள்ளது.