சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து தோனி விலகலா? - பயிற்சியாளர் பரபரப்பு பேட்டி

Thahir
in கிரிக்கெட்Report this article
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அடுத்த போட்டியில் பங்கேற்பாரா என் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ராஜஸ்தான் அணி அதிரடி ரன் குவிப்பு
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் (52) மற்றும் படிக்கல்(38 ரன்கள்) அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் அந்த அணி 175 ரன்களை குவித்தது.
தோல்வியடைந்த சென்னை அணி
சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா, தேஸ்பாண்டே, மற்றும் ஆகாஷ் சிங் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினா்.
176 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் ருதுராஜ்(8 ரன்கள்) ஏமாற்றமளிக்க, தொடர்ந்து விளையாடிய கான்வே(50 ரன்கள்) அரைசதமடித்தார்.
அதன்பின் களமிறங்கிய ரஹானே அதிரடியாக 31 ரன்கள் குவித்தார். ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சென்னை அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.இதையடுத்து ஜடேஜா மற்றும் தோனி களமிறங்கினர்.
ஆட்டத்தின் இறுதி வரை பரபரப்பாக சென்ற போட்டியில், இருவரும் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகள் விளாச ஆட்டத்தில் மேலும் சூடு பிடித்தது.
கடைசி ஓவரில் 21 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், முதலிரண்டு பந்துகளும் ஒய்டாக அமைய தோனி, 2 சிக்ஸர் அடிக்க, இறுதியில் சென்னை 17 ரன்கள் மட்டுமே அடித்தது.
இதனால் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில், அஸ்வின் மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
தோனிக்கு காயம்
இந்த நிலையில், சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது காயத்தை திடப்படுத்திக்கொண்டு அணியை தொடர்ந்து வழி நடத்துவார் என நாங்கள் நம்புகிறோம்.
போட்டியில் விளையாடுவதற்கான உடற்தகுதியை அவர் கொண்டுள்ளார் என பிளெமிங் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் அணியுடனான தோல்விக்கு பிறகு அவர் இதை தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக தான் டோனியால் சில நகர்வுகளை மேற்கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.