"4 பந்துகளில் 4 விக்கெட்" - டி20 உலகக்கோப்பையில் அசத்திய அயர்லாந்து வீரர்

Curtis Campher IREvNER
By Petchi Avudaiappan Oct 18, 2021 03:56 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

நெதர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் அயர்லாந்து வீரர் கர்டிஸ் கேம்பர் அபார சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான முதல் சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. அதில் இன்று நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. 20 ஓவர்கள் முழுவதும் விளையாடிய அந்த அணி 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகப்பட்சமாக நெதர்லாந்து அணி வீரர் மேக்ஸ் ஓ டவுட் 51 ரன்கள் விளாசினார். 

இந்த போட்டியில் அயர்லாந்து அணியை சேர்ந்த 22 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளர் கர்டிஸ் கேம்பர் 10ஆவது ஓவரை வீசினார். அந்த ஓவரில் 2, 3, 4, 5 ஆகிய பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதுமட்டுமிலாமல் அயர்லாந்து அணிக்காக டி20 உலக கோப்பை தொடரில் முதல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி கர்டிஸ் கேம்பர் அபார சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்  இலங்கை அணியை சேர்ந்த லசித் மலிங்கா, ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ரசித் கான் ஆகியோர் 4 விக்கெட்டுகளை தொடர்ச்சியாக வீழ்த்தி சாதனை படைத்த நிலையில் அந்த வரிசையில் 22 வயது மட்டுமே ஆன கர்டிஸ் கேம்பர் இணைந்துள்ளார். மேலும் இந்த போட்டியில் 4 ஓவரை வீசிய அவர் 26 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு சமூகவலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.