குஜராத் சட்டமன்ற தேர்தல் இன்றுடன் ஓய்கிறது பிரசாரம்
Gujarat
By Thahir
குஜராத்தில் முதல் கட்டமாக தேர்தல் நடைப்பெறுகிற 89 தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது.
இன்று ஓய்கிறது பிரசாரம்
குஜராத்தில் 182 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு வரும் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலயில், முதல் கட்டமாக 89 தொகுதிகளில் வரும் டிசம்பர் 1ம் தேதி தேர்தல் நடைப்பெறுகிறது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகள் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், இன்றுடன் குஜராத்தில் பிரச்சாரம் முடிகிறது.